குருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா- அடுத்த போட்டிகள் எப்போது-BCCI தகவல்..!

குருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா- அடுத்த போட்டிகள் எப்போது-BCCI தகவல்..!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் மீண்டும் கொரோன தன் வேலையைக் காட்டியுள்ளது.

முன்னதாக இலங்கை வீரர்கள் இங்கிலாந்து சென்றபோது ,இங்கிலாந்து அணியினர் கொரோனா தொற்றுக்கு இலக்கானதால் இலங்கை, இந்திய தொடர் சிக்கலை சந்தித்தது.

அதன்பின்னர் பிற்போடப்பட்ட இந்த T20 போட்டி தொடர் இப்போது நடைபெற்றுவரும் நிலையில், குருனல் பாண்டியாவுக்கும் கொரோனா எனும் செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன்காரணத்தால் இன்று (27) இடம்பெறவிருந்த இருபதுக்கு இருருபது போட்டி பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, BCCI தகவல்படி இந்த போட்டி நாளைய தினமும் (28), 3 வதும் இறுதியான போட்டி நாளை மறுதினமும் (29) இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலவேளைகளில் வீரர்கள் எவருக்கேனும் கொரோனா தொற்று காணப்படுமாக இருந்தால், தொடர் இழுபறி நிலைக்குள் செல்லலலாம் என்றே கருதப்படுகின்றது.

பாண்டியாவுடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Previous articleமுடியை கட்டையாக வெட்டுங்கள், சமூக வலைத்தளங்களை தவிருங்கள், இல்லையேல் கிரிக்கெட்டுக்கு Good bye சொல்லிவிட்டு போய் விடுங்கள் …!
Next articleதீவிர பயிற்சியில் இந்திய அணி (புகைப்படங்கள் இணைப்பு)