குழப்பநிலை- இதுவரை 7 மரணங்கள்..!

இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மையில் அதிகளவான உயிரிழப்புகளும் காயங்களும் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் இதுவரை குறைந்தது 07 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 220 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.வி.சரத் குமார, அவரது இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

பிரதேச சபைத் தலைவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்று இரவு அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததில் பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

24 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.