இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமான 2 வது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணித்தலைவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடது முழங்கையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அணி தலைவராக டாம் லதாம் செயற்படவுள்ளதாகவும், கேன் வில்லியம்சன் விளையாடும் 3 ம் இலக்கத்தில் பென் யங் விளையாடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்குமான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியற்று நிறைவுக்கு வந்த நிலையில், 2 வது போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.
இதேநேரம் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் மாபெரும் இறுதி போட்டி எதிர்வரும் 18 ம் திகதி ஆரபிக்கவுள்ள நிலையில், நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் உபாதையால் அவதிப்படுகின்றமை அந்த நாட்டு ரசிகர்களுக்கு கவலையை உண்டுபண்ணியுள்ளது.