கேள்விக்குறியாகிறதா ரஹானேயின் டெஸ்ட் கிரிக்கெட் – புள்ளிவிபரம்…!

கேள்விக்குறியாகிறதா ரஹானேயின் டெஸ்ட் கிரிக்கெட் – புள்ளிவிபரம்…!

இந்திய அணித்தலைவராக கோஹ்லி இல்லாமலேயே இளம் படையணியைக் கொண்டு அவுஸ்திரேலியாவில் சரித்திரப்பூர்வ டெஸ்ட் தொடர் வெற்றியை ஈட்டியவர் ரஹானே.

ஆனால் ரஹானேயின் டெஸ்ட் பெறுதிகள் மிகப்பெரியளவில் பேசும்படியாக இல்லையாயென்பதே இந்திய தேர்வாளர்களுக்கு இருக்கின்ற தலையிடியாக இருக்கின்றது.

2020 ஜனவரியில் இந்தியாவின் நியூஸிலாந்துக்கான சுற்றுலா ஆரம்பித்ததிலிருந்து ரஹானே 7 டெஸ்ட் போட்டிகளில் 14 இன்னிங்ஸ்களில் 360  ஓட்டங்களையே குவித்துள்ளார்.

சராசரி 27.69 ஆக காணப்படுகின்றது. மெல்போர்ன் மைதானத்தில் அடித்த மாட்ச் வின்னிங்ஸ் சென்சரியை விட, சொல்லும்படியாக ஒன்றும் அமையவில்லை.

மெல்போர்ன் மைதானத்தில் அடித்த 112 ஓட்டங்களை விட்டுப் பார்த்தல் மீதமான 13 இன்னிங்ஸ்களில் பெற்றுக்கொண்டது 248 ஓட்டங்களேயாகும், சராசரி 20.67

குறித்த 13 இன்னிங்ஸ்களில் 49 பந்துக்கு ஒரு தடவை ரஹானே விக்கெட்டை பறிகொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பெறுதிகளே ரஹானே மீதான விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது.