கேள்விக்குறியாகும் நடப்புச் சம்பியனின் அரையிறுதி வாய்ப்பு- தென் ஆப்ரிக்கா அணியிடமும் வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வி..!

கேள்விக்குறியாகும் நடப்புச் சம்பியனின் அரையிறுதி வாய்ப்பு- தென் ஆப்ரிக்கா அணியிடமும் வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வி..!

T20 உலக கிண்ண போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில் நடப்பு சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி அரையிறுதிக்கு எட்டுவதில் பாரிய சிக்கலை சந்தித்து உள்ளது, மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் 55 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்தநிலையில் இன்று இடம்பெற்ற தென்ஆப்பிரிக்கா அணியுடனான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியை தழுவியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை பெற்றது, லெண்டில் சிமெண்ட்ஸ் 35 பந்துகளில் 16 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார், எவென் லூயிஸ் 35 பந்துகளில் 56 ஓட்டங்களை குவித்தார், பொல்லார்ட், கெயில், பூரான், ரஸ்ஸல் என அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தும் கூட இவர்களால் மிகப்பெரிய அளவிலான ஓட்டு குவிப்பு மேற்கொள்ள முடியாதுபோனமை குறிப்பிடத்தக்கது.

20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை மட்டுமே மேற்கிந்திய தீவுகள் பெற்றது, பந்துவீச்சில் பிரிஸ்டோரிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், பதிலளித்த 144 என்கிற இலக்குடன் ஆடிய தென்னாபிரிக்க அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

ரீஸா ஹென்றிக்ஸ் 39 ஓட்டங்களையும், மார்க்ராம் 51 * ஓட்டங்களையும், வென்டெர் டுசென் 43* ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இதன் மூலமாக இப்போது புள்ளிப் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் இறுதி இடத்தில் இருக்கிறது, மேற்கிந்திய தீவுகள் இருக்கும் இந்தக் குழுவில் இலங்கை, அவுஸ்திரேலிய ,பங்களாதேஷ் ஆகிய அணிகளும் இடம்பெற்று இருக்கும் நிலையில், மீதமான 3 போட்டிகளையும் வெற்றிகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் மேற்கிந்திய தீவுகள் காணப்படுகிறது.