கொண்டாடப்படும் பாபர் அசாம்- தனக்கான ஆட்ட நாயகன் விருதை குஷ்தில் ஷாவுக்கு வழங்கினார்..! (வீடியோ இணைப்பு)

கொண்டாடப்படும் பாபர் அசாம்- தனக்கான ஆட்ட நாயகன் விருதை குஷ்தில் ஷாவுக்கு வழங்கினார்..!

முல்தானில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கேப்டன் பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருதை குஷ்தில் ஷாவிடம் ஒப்படைத்தார்,

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பாகிஸ்தானின் துரத்தலைத் தலைமை தாங்கியவர் பாபர், தனது 17வது ஒருநாள் சதத்தையும்,தொடர்சியான மூன்றாவது சதத்தையும் அடித்தார்.

இருப்பினும், ஒரு மிடில்-ஆர்டர் தடுமாறல அணியை அச்சுறுத்தியது. ஒரு கட்டத்தில் 22 பந்தில் 42 ரன்கள் தேவை என்ற நிலையில், குஷ்தில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்தார், இறுதியில் ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி பெறவைத்தார்.

போட்டிக்கு பிந்தைய விழாவில், பாபர் 103 ரன்களுக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற இருந்தார், அப்போது கேப்டன் மைக்கை நோக்கி நடந்து சென்று “நான் குஷ்தில் ஷாவுக்கு ஆட்ட நாயகனை வழங்க விரும்புகிறேன்.” என்று சொல்லி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன.

 

YouTube காணொளி ?

இந்தியாவின் உலகசாதனை கனவை தவிடுபொடியாக்கிய தென் ஆபிரிக்கா ..!#SAvIND #Cricket #BCCI #worldrecord