கொரோனா காரணமாக இலங்கை அணியில் மேலும் சில வீரர்கள் சேர்ப்பு-விபரம்..!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சுழற்பந்து வீச்சாளர் லசித் அம்புல்தெனிய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார், கோவிட் காரணமாக பிரவீன் ஜெயவிக்ரமவும் அணியில் இல்லை.

மஹேஷ் தீக்ஷன, லக்ஷித மனசிங்க மற்றும் துனித் வெல்லலகே ஆகியோர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று (ஜூலை 4) அணியில் இணைந்தனர்.

இதற்கிடையில், கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ் தனது தனிமைப்படுத்தலை இன்று முடிக்கிறார்.