கொல்கத்தா அணியின் சீருடையுடன் இருந்து KKR வெற்றியை கொண்டாடிய அந்த பெண் யார் ? வெளிவரும் தகவல்..!

ஐபிஎல் கேமராமேன் ஞாயிற்றுக்கிழமை துபாயில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிக்கு எதிரான கேகேஆர் விளையாடிய போட்டியின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஜெர்சி அணிந்த ஒரு அழகான பெண்ணைக் காண்பித்தார்.

ஐபிஎல் போட்டிகளின் நடுவே இவ்வாறான  சம்பவங்கள் பதிவாவது வழமையானது.

116 என்ற இலக்கைத் துரத்தி கேன் வில்லியம்சனின் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மோர்கன் தலைமையிலான KKR அணி சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இந்த சீசனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 6 போட்டிகளில் கே.கே.ஆர் 4 போட்டிகளில் வென்றுள்ளது.

இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஜெர்சியில் அணிக்கு உற்சாகம் அளித்தது ஷகிப் அல் ஹசனின் மனைவி உம்மே அகமது ஷிஷிர் என அறியக்கிடைக்கிறது.

ஷிஷிர் தனது மகளுடன் ஸ்டாண்டில் உட்கார்ந்து தனது கணவரின் அணியை உற்சாகப்படுத்தினார். ஷிஷிர் ஒரு வங்கதேச மாடல் மற்றும் மென்பொருள் பொறியாளர்; இருவரும் 2012 இல் திருமணம் செய்துகொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை, பங்களாதேஷ் ஆல்-ரவுண்டர் ஆடும் பதினொரிவரில் அன்ரு ரசலுக்கு பதிலாக சேர்க்கப்பட்டு விளையாடினார், அத்துடன் கே.கே.ஆரின் வெற்றிக்கும் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

ஷாகிப் அல ஹசன், கேன் வில்லியம்சனை ரன் அவுட் செய்ததுடன் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டையும் போட்டியில் வீழ்த்தினார்; அவர் தனது 4 ஓவர்களில் 20 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleபுதிய உலக சாதனையை நிலைநாட்டினார் பாபர் அசாம் ..!
Next articleஅவுஸ்ரேலியாவில் மிரட்டிய இந்திய மகளிர் அணி- சாதனை டெஸ்ட் நிறைவு..!