கொல்கத்தா அணியை இலகுவாக பந்தாடியது டெல்லி கேப்பிடல்ஸ்- பிரித்வி ஷா அதிரடி விளாசல்

14வது ஐபிஎல் தொடரின் 25 போட்டி சற்று முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது, இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.

இந்தப்போட்டியில் மிக இலகுவான முறையில் 7 விக்கெட்டுகளால் டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றியை பதிவு செய்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 154 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி  பிரித்வி ஷா மற்றும் ஷிகார் தவான் ஆகியோருடைய அதிரடியான ஆரம்பம் மூலமாக டெல்லி கேப்பிடல் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

ஷிகர் தவான் துடுப்பாட்டத்தில் 46 ஓட்டங்களையும் பிரித்வி ஷா 41 பந்துகளில் 82 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர், இறுதியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 21 பந்துகளில் மீதமிருக்க 16.3 ஓவர்களில்  போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று அசத்தியது.

பிரித்வி ஷா முதல் ஓவரிலேயே அனைத்து பந்துகளையும் பவுன்டரிக்கு விரட்டி 25 ஓட்டங்களை முதல் ஓவரிலேயே பெற்றதுடன் 18 பந்துகளில் அரைச்சதம் அடித்தமை குறிப்பிடத்தக்கது .

டெல்லி அணியின் இன்றைய வெற்றி மூலமாக புள்ளி போட்டிகளில் சென்னை , பெங்களூர் அணிகள் பங்கேற்ற 6 போட்டிகளில் விளையாடி 5ல்வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த இடத்திற்கு இப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7வது போட்டியில் விளையாடி 5வது வெற்றியை டெல்லி கேப்பிடல்ஸ் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று பகல் பொழுதில் இடம்பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.