கோபா அமெரிக்கா -நடப்பு சாம்பியன் பிரேசில் அபார வெற்றி..!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு அற்புதமான போட்டியுடன் ஆரம்பித்தது.

நடப்பு சாம்பியன்கள் பிரேசில் ,வெனிசுலாவை வீழ்த்தியது. காசெமிரோ தலைமையிலான பிரேசில் சொந்த மண்ணில் போட்டியைத் தொடங்குவதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது.

தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, வெனிசுலா அணியைச் சேர்ந்த 12 வீரர்கள் கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டனர். கோபா அமெரிக்காவில் தனது முதல் கோலை மார்கின்ஹோஸ் ஆட்டத்தின் 23 வது நிமிடத்தில் பிரேசிலுக்காக முதல் கோலை அடித்தார்.

அதைத் தொடர்ந்து முதல் பாதியில் செலகாவோ பல வாய்ப்புகளைத் தவறவிட்டார், இருப்பினும் அது அவர்களுக்கு பெரிய பாதிப்பை உண்டுபண்ணவில்லை . இரண்டாவது பாதியில் நுழைந்த பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் பிரேசிலுக்கு முன்னிலை இரட்டிப்பாக்கி, பெனால்டி இடத்திலிருந்து தனது 67 வது சர்வதேச கோலை அடித்தார்.

அடுத்த ஆண்டு கட்டாரில் நடைபெறும் ஃபிஃபா உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக, பிரேசிலின் தலைமை பயிற்சியாளர் அடினோர் லியோனார்டோ பச்சி அணிக்கட்டமைப்பை பரிசோதனை செய்வதாக தெரிவித்தார்.

வெனிசுலாவுக்கு எதிரான நேற்றைய இந்த இலகுவான வெற்றியுடன் நடப்பு சாம்பியன்கள் பிரேசில் அடுத்த போட்டியில் 2019 இறுதிப் போட்டியாளர்களான பெருவை ஜூன் 17 அன்று எதிர்கொள்கின்றனர், அதே நேரத்தில் வெனிசுலா கொலம்பியாவை எதிர்கொள்கிறது.