கோபா அமெரிக்க கால்பந்து கிண்ணம் வென்ற அர்ஜென்டினா அணி சொந்த மண்ணில் கோலாகல வரவேற்பு…!

கோபா அமெரிக்க கால்பந்து கிண்ணம் வென்ற ஆர்ஜென்டீனா அணி சொந்த மண்ணில் கோலாகல வரவேற்பு…!

தென்னமெரிக்க கண்ட நாடுகளுக்கு இடையில் இடம்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றது.

இந்த போட்டியில் பிரபலமான பலம் பொருந்திய கால்பந்து அணிகளான பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீனா அணிகள் மோதின.

நடப்புச் சம்பியனான பிரேசில் அணியை 1-0 எனும் அடிப்படையில் தோற்கடித்த ஆர்ஜன்டீனா 28 ஆண்டுகளுக்குப் பின்னர் கோபா அமெரிக்க கால்பந்து கிண்ணத்தை வெற்றிகொண்டு வரலாறு படைத்திருக்கிறது.

மெஸ்ஸிக்கு இதுவரைக்கும் எட்டாக்கனியாக இருந்து வரும் கால்பந்தின் மிக முக்கியமான கிண்ணம் ஒன்றை  வெற்றிபெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியுடன் ஆர்ஜன்டீனா அணியினர் தங்களுடைய தாயகத்தை சென்றடைந்தனர்், தாயகத்தில் ஏராளமான ரசிகர்கள் புடைசூழ்ந்து ஆர்ஜென்டினா கால்பந்து அணிக்கு தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

புகைப்படங்கள் இணைப்பு ????