கோலாகலமான ஒலிம்பிக் நிறைவு _ அமெரிக்கா முதலிடம்..!

டோக்கியோ ஒலிம்பிக் சீனாவை பின்னுக்கு தள்ளி பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம்

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி நேற்றுடன்(8) நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று (8) 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறின.

போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பதக்க பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது.

அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்கள் பெற்றுள்ளது. நேற்று மட்டும் அமெரிக்கா 3 தங்கம் வென்றது. 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் சீனா 2வது இடம் பிடித்தது.

போட்டியை நடத்திய ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது. 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களை ஜப்பான் கைப்பற்றி உள்ளது.

அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் 2024 பாரிஸில் இடம்பெற்றுள்ளன.

#ABDH

 

Previous articleமெஸ்ஸி இல்லாத நிலையில் ரொனால்டோவின் Juvantus அணியை பதம் பார்த்தது பார்சிலோனா..!
Next articleஇந்திய பந்துவீச்சுப் படை குறித்து பாராட்டும் இன்சமாம்…!