கோலிக்காக பரிந்து பேசப்போய் இங்கிலாந்து முன்னாள் அணித்தலைவரிடம் வசமாக சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் தலைவர்..!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி பற்றி சமூக வலைத்தளங்களில் நக்கலான கருத்துக்களை பகிர்ந்த இங்கிலாந்து அணியினுடைய முன்னாள் தலைவர் மைக்கல் வோகனுக்கு, பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சல்மான் பட் பதிலடி கொடுத்துள்ளார்.

இதன் மூலமாக இந்தக் கருத்துக்கு மீண்டும் இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வோகனும் பதிலடி கொடுத்து, சமூக வலைதளங்களில் இருவரும் தமது கருத்துக்களை மாறி மாறி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருக்கின்றார் விராட் கோலி, உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆயினும் விராட் கோலியை விடவும் நியூஸிலாந்து அணி தலைவர் கேன் வில்லியம்சன் தரமான வீரர் என்பது இங்கிலாந்து முன்னாள் அணித்தலைவர் மைக்கல் வோகனின் கருத்தாக அமைந்திருக்கிறது.

கேன் வில்லியம்சன் இந்தியாவில் பிறக்காத காரணத்தாலேயே அவர் மிகப் பெருமளவில் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை எனும் கருத்தை அண்மையில் வோகன் தெரிவித்திருந்தார்.

கோலி அதிக அளவில் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு அவர் இந்தியாவில் பிறந்ததும் இன்ஸ்டகிரம் போன்ற வலைதளங்களில் இருப்பதுவுமே விராட் கோலியின் புகழ் ஓங்கியிருக்கிறது. ஆனால் கோலி போன்ற சமூக வலைத்தளங்களின் ஊடான பிரபலம் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கேன் வில்லியம்சனுக்கு கிடைக்கவில்லை எனும் கருத்தை அண்மையில் பகிர்ந்திருந்தார்.

இந்த தேவையற்ற வம்புச்சண்டையில விராட் கோலிக்கு பரிந்து பேசநினைத்த பாகிஸ்தான் முன்னாள் அணி தலைவர் சல்மான் பட் ஒரு கருத்தை பகிர்ந்திருந்தார், அதாவது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ளார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் எதுவித சதத்தையும் மைக்கல் வோகன் பதிவு செய்யவில்லை என்பதே சல்மான் பட் விராட் கோலிக்கு பரிந்து பேசிய விடயமாகும்.

இதனால் ஆத்திரமடைந்த வோகன், மீண்டும் இதற்கு பதில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் நான் சதம் அடிக்கவில்லை என்பது உண்மைதான்,ஆனால் நான் கனவான் தன்மையான கிரிக்கெட்டை களங்கப்படுத்துகின்ற சூதாட்ட புகார் எதிலும் சிக்கவில்லை என்று குறிப்பிட்டு சல்மான் பட்டிற்கு பதிலடி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

இப்போதைய நிலையில் இந்தக் கருத்தும் சல்மான் பட்டினுடைய கருத்தும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் ஒரு விடயமாக மாறியிருக்கிறது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான சல்மான் பட், சூதாட்ட புகாரில் சிக்கி 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.