கோலிக்கு மட்டும் விடுப்பு கொடுப்பீர்கள், நான் எடுத்தால் என்ன தவறு ? ஓய்வு குறித்து விசனம் வெளிப்படுத்தும் சஹா…!

இந்தியாவின்  மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டர் விருத்திமான் சாஹா வரவிருக்கும் ரஞ்சி டிராபியில் இருந்து வெளியேறத் முடிவு செய்ததிலிருந்து, கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வுபெறவுள்ளார் என  ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விஷயத்தில் கிசுகிசுக்கள் இன்னும் சலசலக்கும் அதே வேளையில், 37 வயதான அவர் தனது கிரிக்கட் இன்னும் முடிவடையவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்போர்ட்ஸ்டார் உடனான ஒரு உரையாடலில், விக்கெட் கீப்பர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் திட்டம் இல்லை என்று கூறினார். ஏனைய டீம் இந்தியா உறுப்பினர்களுடன் ஒப்பிட்டு, விளையாட்டில் இருந்து ஓய்வு எடுத்ததற்காக அவர் மீதான மக்களின் நிலைப்பாடு குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

“மக்கள் குடும்பத்துடன் நேரத்தைக் கழிப்பதற்காகவோ அல்லது பிற தனிப்பட்ட காரணங்களுக்காகவோ ஓய்வு எடுத்துக்கொள்கிறார்கள், விராட் கோலி கூட தந்தைவழி(குழந்தைப் பாக்கியம்) விடுப்பு எடுத்தார். எனவே, நான் ரஞ்சி டிராபியில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்தபோது ஏன் கேள்விகள் எழுப்பப்படுகின்றன? என சாஹா விசனம் வெளியிட்டுள்ளார்.

எதிர்காலம் குறித்த தனது மனநிலையை சஹா தெளிவுபடுத்தினார், : “நான் மிகவும் தெளிவாக சொல்கிறேன், தேர்வாளர்கள் என்னை இலங்கை தொடருக்கு தேர்வு செய்யாவிட்டாலும், நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை.” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.