கோலிக்கு வந்த புதிய தலையிடி …!

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நிறைவுக்கு வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அணித்தலைவர் விராட் கோலி தலைமையிலான RCB அணியினர் மெதுவாக மந்தகதியில் பந்து வீசினார்கள் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கோலிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வெற்றிகரமான அணியாக நடைபோட்ட கோலி தலைமையிலான பெங்களூர் அணி தோல்வியை தழுவியுள்ளதுடன் அணித்தலைவர் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.