கோலியின் கதை முடிந்ததா- வலுக்கும் விமர்சனம்..!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிம்மசொப்பனமாக விளங்கிய விராட் கோலி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு சர்வதேச சதத்தைக் கூட பதிவுசெய்ய முடியாமல் இருந்து வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்கள் விளாசுதை வாடிக்கையாக வைத்திருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு பிறகு இதுவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் விளையாடி வருகிறார்.

விரைவில் சச்சின் டெண்டுல்கரின் 100-வது சதத்தை நோக்கி வேகமாக முன்னேறி அவரது சாதனையை முறியடிப்பார் என்று பலரும் கூறி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அவர் ஒரு சதம் கூட அடிக்காமல் இருப்பது அவரது ரசிகர்களிடையே பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது துவங்கி நடைபெற்று வரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடித்து மீண்டும் தனது பழைய ஆதிக்கத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் தற்போது ஏமாற்றமே மிஞ்சியது. முதல் இன்னிங்சில் 4 பவுண்டரியுடன் அட்டகாசமாக ஆட்டத்தை துவங்கிய கோலி 35 ரன்கள் எடுத்திருந்த போது தேவையில்லாத ஷாட் விளையாடி ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் காரணமாக முதல் இன்னிங்சில் அந்த வாய்ப்பு பறிபோனது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டில் அவருக்கு கடைசியாக கிடைத்த வாய்ப்பாக இந்த இரண்டாவது இன்னிங்ஸ் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த இன்னிங்சிலும் 4 பவுண்டரிகள் விளாசிய அவர் 18 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் தேவையில்லாத பந்தை அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் காரணமாக இந்த ஆண்டு கோலிக்கு கடைசியாக கிடைத்த வாய்ப்பும் பறிபோனது. இனி அடுத்த இரண்டாவது போட்டியில் அதாவது 2022-ஆம் ஆண்டிலாவது சதம் அடித்து மீண்டும் தனது ஆதிக்கத்தை துவங்குவாரா? என்பதே ரசிகர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

#Abdh