கோலியின் சாதனையை தகர்த்தார் பாபர் ஆசாம்…!!!

இருபதுக்கு இருபது போட்டிகளில் மிகக் குறைந்த இன்னிங்ஸில் 2000 ஓட்டங்களைத் தாண்டிய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை பாபர் ஆசாம் இன்று தனதாக்கினார். சிம்பாபே அணிக்கெதிரான மூன்றாவது T20 போட்டியிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

முன்னதாக விராட் கோலி 56 இன்னிங்ஸில் விளையாடி 2000 ஓட்டங்களைக் கடந்து இச்சாதனையை புரிந்திருந்தார். ஆனால் பாபர் ஆசாம் வெறும் 52 இன்னிங்ஸிலேயே 2000 ஓட்டங்களைக் கடந்து இச்சாதனையை முறியடித்தார்.

அத்தோடு T20 போட்டிகளில் 2000 ஓட்டங்களைக் கடந்த 11 ஆவது வீரராக பாபர் ஆசாம்
மாறியிருக்கின்றார்.

இன்றைய தினம் சிம்பாபே அணிக்கெதிரான மூன்றாவது T20 போட்டியை 24 ஓட்டங்களால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தொடரை 2-1 என்ற ரீதியில் தனதாக்கியது.