கோலியை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் – ஏன் தெரியுமா ?

இங்கிலாந்து அணியுடனான 2 வது போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்தது.

இங்கிலாந்து அணியின் அபார பந்து வீச்சு காரணமாக இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைதொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு ரன்னில் வெளியேறிய இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான புஜாராவை ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக அதிகளவு விமர்சித்து வருகின்றனர்.

ஏனெனில் சமீபகாலமாக புஜாராவின் பேட்டிங் பார்ம் பமோசமாக உள்ளது.தற்போதும் அவர் தொடர்ச்சியான சறுக்கலை சந்தித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி இந்த தொடரிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு புஜாராவின் பேட்டிங் திருப்திகரமாக இல்லை. இதன் காரணமாக இந்த மூன்றாவது போட்டியில் அவருக்கு பதிலாக சூரியகுமார் களமிறங்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் காரணமாக மீண்டும் அதே அணியை கோலி களமிறக்கினார். இந்நிலையில் இந்த போட்டியிலும் புஜாரா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் அவரை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விமர்சித்தது மட்டுமின்றி இனிவரும் போட்டிகளில் அவர் இந்திய அணிக்கு தேவையா ? என்றும் கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

கோலியின் இந்த மோசமான முடிவு ரசிகர்களை கோலியையும் சேர்த்து விமர்சிக்க வைத்துள்ளது.

இதுதொடர்பில் கோலி & கோ அடுத்த டெஸ்ட்டில் என்ன தீர்மானம் மேற்கொள்ளும் என்று காத்திருக்கலாம்.