கோலியை வற்புறுத்தி இந்தியாவிற்கு அற்புத ஆட்டம் இழப்பை வாங்கிக் கொடுத்த பான்ட்..! (வீடியோ இணைப்பு)

கோலியை வற்புறுத்தி இந்தியாவிற்கு அற்புத ஆட்டம் இழப்பை வாங்கிக் கொடுத்த பான்ட்..! (வீடியோ இணைப்பு)

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நொட்டிங்காம் மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

போட்டியில் முதல் நாளில் ஆடிய இங்கிலாந்து 183 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்த போட்டியில் மதிய போசனத்திற்கு முன்பாக இங்கிலாந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து வீரர் கரௌலி சிராஜ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்ததாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நடுவர் ஆட்டமிழப்பை வழங்கவில்லை, ஆயினும்  கோலிி DRS முடிவுக்கு சென்று ஏமாற்றமடைந்தார். அதற்கு பின்னர் மூன்று பந்துகள் இடைவெளியில் மீண்டும் அதே மாதிரியான ஒரு ஆட்டமிழப்பு கோரிக்கை வைக்கப்பட்டது.

ஏற்கனவே DRS வாய்ப்பு ஒன்றை இழந்த காரணத்தால் இந்தியர்கள் டிஆர்எஸ்  கேட்பதற்கு தயக்கம் காட்டினர் ,ஆயினும்கூட DRS கோரிக்கையை வற்புறுத்தி பான்ட் அந்த ஆட்டமிழப்பை பெற்றுக் கொடுத்தார்.

 பான்டின் இந்த துல்லியமான கணிப்பு ரசிகர்கள் எல்லாவற்றையும் சமூக வலைத்தளங்களில் கொண்டாட வைத்திருக்கிறது.

வீடியோ இணைப்பு ??