கோலி தொடர்பில் சர்ச்சையான கருத்து தெரிவித்த அக்தர்..!

இந்திய வீரர் விராட் கோலி அண்மையில் அகமதாபாத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது 75வது சதத்தை அடித்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 28வது டெஸ்ட் சதம் அடித்ததும் சிறப்பு.

இந்நிலையில், விராட் கோலி குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

விராட் இன்னும் எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று அக்தர் கூறினார்.

“விராட்டை 43 வயது வரை விளையாடச் சொல்கிறேன். உங்களுக்கு இன்னும் எட்டு அல்லது ஒன்பது வருடங்கள் உள்ளன. இந்தியா உங்களை சக்கர நாற்காலியில் விளையாட வைக்கும். அவர் ஓய்வு பெறும் போது குறைந்தது 110 சதங்கள் அடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.”

மேலும், விராட் கோலி தாங்கள் விளையாடிய காலத்தில் இத்தனை சதங்கள் அடித்திருக்க மாட்டார் என்றும், வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம் ஆகியோர் திறமையின் உச்சத்தில் இருந்திருந்தால் விராட்டுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

“நான், வக்கார் (யூனிஸ்), வாசிம் பாய் (அக்ரம்) ஆகியோர் உச்சத்தில் இருந்திருந்தால், விராட்டுக்கு கடினமாக இருந்திருக்கும், அவர் எங்கள் காலத்தில் விளையாடியிருந்தால், அவர் 70 சதங்கள் அடித்திருக்க மாட்டார், அவர் 30-50 சதங்களையே அடித்திருப்பார்்என்று சோயப் அக்தர் அங்கு கூறினார்.

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇