கோலி நழுவவிட்டதை ரோகித் சர்மா படைக்கப் போகிறார், புதிய உலக சாதனை நிலைநாட்ட போகும் இந்திய அணி …!
மேற்கிந்திய தீவுகள் ,இந்திய அணிகளுக்கிடையில் வருகின்ற 6ஆம் திகதி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அஹமதாபாத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி விளையாடுவதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு புதிய உலக சாதனையை படைக்கவுள்ளது.
1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஒரே அணி என்கின்ற பெருமையே அந்த சாதனையாக அமையவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தலகமைப் பதவியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அந்த 1000 வது ஒருநாள் போட்டியின்போது தலைவராக கடமையாற்றும் சாதனையை படைக்க முடியாத போகிறது.
ஆயினும் ரோகித் சர்மாவிற்கு அதிர்ஷ்டம் அடிக்க மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டி இடம் பெறுகின்றபோது புதிய சாதனைக்கான இந்தியாவை வழி நடத்த போகிறார் .
இந்தியாவை அடுத்து ஆஸ்திரேலியாவும் (958 போட்டிகள்), பாகிஸ்தானும் (936 போட்டிகள்) அடுத்தடுத்த இடங்களில் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அணிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.