கோலி படைத்த மற்றுமொரு சாதனை..!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களைப் பெற்றது, ஆனால் பதில் இன்னிங்சை விளையாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 எடுத்து வெற்றி பெற்றது.

விராட் கோலி ஆட்டமிழக்காமல் 113 ரன்களும், கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 44 ரன்களும் எடுத்தனர்.

இந்த இன்னிங்ஸ் மூலம் 7,500 ஐபிஎல் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை கோஹ்லி படைத்தார்.

ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 100 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 69 ரன்களும் எடுத்தனர்.