பெங்களூர் அணியின் தலைமைத்துவத்தை விராட் கோலி மீண்டும் பெறுவார் என தான் எண்ணுவதாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
சில மன அழுத்தங்கள் காரணமாக விராட் கோலி தனது தலைமைத்துவத்தை விட்டுக் கொடுத்துள்ளதாகவும் இதனால் பெஃப் டு ப்ளஸிஸை அணியின் தலைவராக நியமிக்க பெங்களூர் அணி தீர்மானித்துள்ளதாகவும் அஸ்வின் தெரிவிக்கின்றார்.
பெஃப் டு ப்ளஸிஸ், இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெறுவார் எனவும் அதன் பின்னர் பெங்களூர் அணியின் தலைமைத்துவத்தை விராட்கோலி மீண்டும் பெறுவார் என தான் எண்ணுவதாகவும் ரவிச்சந்திரன் அஷ்வின் குறிப்பிட்டுள்ளார்.
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி மும்பையில் ஆரம்பமாகவுள்ளது.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
. இதில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையில் களம் இறங்குகிறது.
கெப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய நட்சத்திர பெட்ஸ்மேன் விராட் கோலி அணியுடன் இணைந்து பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.