இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மைக்கல் வோகன், இப்போதைய நிலையில் டெஸ்ட் உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களான கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை ஒப்பிட்டு கருத்து வெளியிட்டிருக்கிறார்.
கோலியை விடவும் கேன் வில்லியம்சன் திறமையான ஒரு வீரராக இருக்கிறார், ஆனால் கேன் வில்லியம்சன் இந்தியாவில் பிறக்காத காரணத்தால் கேன் வில்லியம்சனுடைய புகழ் பெரிய அளவில் எடுபடவில்லை என்கின்ற கருத்து அவரிடம் இருந்து வந்திருக்கிறது.
கோலி தரமான துடுப்பாட்ட வீரராக இருந்தாலும் இந்தியராக இருப்பதனாலும், இன்ஸ்டர்க்கிரம் போன்று வலைதளங்களில் பிரபலம் பெற்று இருப்பதாலும் கோலியின் புகழ் ஓங்கி இருக்கிறது.
ஆனால் கேன் வில்லியம்சன் இந்தியர் அல்லாத காரணத்தால் அவர் பெருமளவில் பேசப்படுவதில்லை என்கின்ற கருத்தை மைக்கல் வோகன் தெரிவித்துள்ளார்.
இந்த மாதிரியாக இந்தியர்களையும் இந்திய அணியையும் குறைத்து மதிப்பிடுகின்ற கருத்துக்களை இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வோகன் தெரிவித்து சிகர்களிடம் வாங்கிக் கட்டிய வரலாறுகள் ஏராளம் இருக்கும் நிலையில், இந்த கருத்துக்கள் தொடர்பிலும் ரசிகர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.