கோல் கணக்கை ஆரம்பித்தார் லயனல் மெஸ்ஸி- சாம்பியன் லீக்கில் அபார வெற்றி…!

கோல் கணக்கை ஆரம்பித்தார் லயனல் மெஸ்ஸி- சாம்பியன் லீக்கில் அபார வெற்றி…!

பிரபல கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி, இந்த பருவ காலத்திற்கான கோல் கணக்கை நேற்று நள்ளிரவு ஆரம்பித்துள்ளார்.

லயனல் மெஸ்ஸி பார்சிலோனா கழகத்திலிருந்து பிரிந்து பிரான்சின் பிரபலமான கழகமான பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த மூன்று போட்டிகளாக PSG அணிக்காக கோல் பங்களிப்பை வழங்க தவறிய மெஸ்ஸி, நேற்று அபாரமாக சாம்பியன் லீக் கால்பந்தாட்ட போட்டியில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து பிரிமீயர் லீக் கழகமான மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் PSG 2-0 என வெற்றி கொண்டது.

இந்த போட்டியில் 2-வது கோலை PSG கழகத்துக்காக மெஸ்ஸி அடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது, இதன் மூலமாக இந்த பருவத்திற்காகவும் தன்னுடைய கோல் கணக்கை ஆரம்பித்த மெஸ்ஸி தன் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இன்னும் இன்னும் ஏராளமான கோல்கள் மெஸ்ஸியிடம் இருந்து பெறப்படும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். பார்சிலோனா கழகத்திற்காக அசத்திய அதே மெஸ்ஸியை நாம் இனி காண தயாராகுவோம்.