கோவிட் காலத்தில் கிரிக்கெட் எளிதானது அல்ல. ஒவ்வொரு தொடரின் தொடக்கத்திற்கும் முன்பு தனிமைப்படுத்தலின் நடைமுறைகள் மற்றும் உயிர் குமிழ்கள் வீரர்களின் வாழ்க்கையை அதிகளவு கடினமாக்கியுள்ளன.
விளையாட்டின் இவ்வாறான நிலைமை வீரர்களை அதிகளவில் பாதிக்கிறது என்பது உண்மையானது,
“எல்லா நேரத்திலும் உயிர் குமிழியில் இருப்பது எளிதல்ல, கடந்த வருடத்தில் நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடினோம். இது எங்களுக்கு நல்லது ஆனால் அதே நேரத்தில் அது வீரர்களுக்கும் மன உளைச்சலாக மாறும், எனும் உண்மைக் கருத்தை பாகிஸ்தான் அணியின் உதவிதலைவர் ரிஸ்வான் கூறினார்.
இணையத்தில் பேட்டி ஒன்றின்போதே ரிஸ்வான் இந்த கருத்தை முன்வைத்தார்.
பாகிஸ்தான் தற்போது வெஸ்ட் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஈடுபட்டுள்ளது, முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் ஆகஸ்ட் 20 அன்று சபீனா பார்க்கில் தொடங்கவுள்ளது.