கோஹ்லிக்கு என்னவானது ,வலுக்கும் விமர்சனம் – சச்சினின் மோசமான சாதனையை நோக்கி நகர்கின்றார்…!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான விராட் கோஹ்லி தொடர்பிலேயே அனைவரது பார்வையும் இப்போதிருக்கிறது,
நீண்டகாலமாக கோஹ்லியின் துடுப்பு சதம் எதனையும் காணவில்லை என்பதுதான் அனைவரது வலுக்கும் விமர்சனங்களுக்கும் பிரதான காரணமாகும்.
கோஹ்லி மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இப்போதைய 3 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 26 ஓட்டங்களை மட்டுமேதான் விளாசியுள்ளார்.அதுவும் கோஹ்லி இன்றைய இறுதி ஒருநாள் போட்டியில் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்தமையானது ஒட்டுமொத்தமான அவரது கிரிக்கெட் வாழ்வில் 32 வது தடவையாகும்,
1-7 வரையான முன்னிலை துடுப்பாட்ட வீரர்களுடன் ஒப்பிடும்போது கோஹ்லி, சச்சினுக்கு அடுத்த நிலையில் காணப்படுகின்றார், சச்சின் 34 தடவைகளும், கோஹ்லி 32 தடவைகளுக்கு டக் அவுட் முறை மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆட்டமிழந்துள்ளனர்.
அவரது கடைசி 10 ஒருநாள் போட்டிகளில், 33.40 சராசரியில் 334 ஓட்டங்களையே எடுத்துள்ளார், இது அவரது ஒட்டுமொத்த சராசரியான 58.07 க்கு முற்றிலும் மாறாக உள்ளது. உண்மையில் இந்த 10 ஆட்டங்களில் ஐந்து அரை சதங்களை அடித்துள்ளார். மூன்று போட்டிகள் தொடர்ச்சியான ஆட்டங்களில் வந்தன – ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பெராவில் மற்றும் இரண்டு இங்கிலாந்துக்கு எதிராக புனேவில் இடம்பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோஹ்லியின் இறுதி 5 ஒருநாள் போட்டிகளில் 7, 0, 8, 18 , 0 எனும் அடிப்படையில் 33 ஓட்டங்களை மட்டுமேதான் பெற்றுள்ளார்.
கோஹ்லியின் கடைசி சர்வதேச சதம் நவம்பர் 2019 இல் வந்தது. இது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் வங்காளதேசத்திற்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இருந்தது. அவரது கடைசி ஒரு நாள் சதம் ஆகஸ்ட் 14, 2019 அன்று போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது.
ஆகமொத்தத்தில் கோஹ்லியின் தொடர்ச்சியான இந்த சறுக்கல் எல்லோரையும் விமர்சிக்க வைத்துள்ளது என்பதுவே உண்மையான கருத்தாகும்.