கோஹ்லிக்கு ஒரு வீரரைக் கொடுத்துதவும் ரோஹித் சர்மா…!

IPL போட்டித்தொடரில் பங்கேற்று வரும் வீரர்கள் கொரோனா அச்சம் காரணமாக தொடரை இடைநடுவே கைவிட்டுக் கொண்டு தாயகம் கிளம்புகின்றனர்.

இதனால IPL ட்ரேட் விதிமுறைகளின் அடிப்படையில் வீரர்களை பரிமாற்றிக் கொள்ளும் திட்டத்தின் அடிப்படையில், உதிரி வீரர்கள் ஏனைய அணிகளுக்கு வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் நியூசிலாந்து வீரரான ஸ்காட் குஃகெளிஜன் , விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு வழங்கப்பட்டுள்ளார்.

இப்படியான விதிமுறைகளின் அடிப்படையில் வீரர்களை மாற்றிக் கொள்ளும் போது, எந்த வீரரும் இந்த சீசன் முடியும்வரை மீண்டும் தமது அணிகளுக்கு திரும்ப முடியாது என்பது முக்கியமானது.

அவுஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்சனுக்காக ,மும்பை இந்தியன்ஸ் அணியின் மேலதிக வீரராக இருக்கும் ஸ்காட் குஃகெளிஜன் RCB க்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.