கோஹ்லிக்கு பின் இந்திய அணியின் அடுத்த தலைவர் இவர்தான்- யுவராஜ் சிங் கணிப்பு பலிக்குமா?

கோஹ்லிக்கு பின் இந்திய அணியின் அடுத்த தலைவர் இவர்தான்- யுவராஜ் சிங் கணிப்பு பலிக்குமா?

கோஹ்லிக்கு பின் இந்திய அணியின் அடுத்த தலைவறாகும் வாய்ப்பு இளம் வீரர் விக்கெட் காப்பாளர் ரிஷாப் பான்ட் க்கு இருக்கிறது என்று யுவராஜ் சிங் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

நான் ரிஷாப்பை ஒரு திறமையான இந்திய கேப்டனாக பார்க்கிறேன். ஏனென்றால் அவர் மிகத்திறமையான தலைமைத்துவ பண்புகள் கொண்ட வீரராக திகழ்கின்றார்.

டெல்லி கெப்பிட்டல்ஸ்க்கான IPL போட்டிகளில் கேப்டனாக இருந்தபோது அவரைப் பார்த்ததால் அவருக்கு நிச்சயமாக ஒரு புத்திசாலி மூளை இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இந்திய அணியின் தலைமையில் கோஹ்லி இன்னும் பல ஆண்டுகள் தொடரவுள்ள நிலையில், இந்தியாவின் முன்னாள் சகலதுறை வீரர் யுவராஜ் சிங் சமீபத்தில் கோஹ்லியின் இடத்திற்கு ஒரு வாரிசாக இருக்கக்கூடிய ஒரு இளைஞரை பெயரிட்டார். எதிர்காலத்தில் இந்திய அணியை வழிநடத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பொருத்தமானவர் என்பது அவரது கணிப்பாகும்.

எனவே வரும் ஆண்டுகளில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக மக்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்று யுவராஜ் சிங் “டைம்ஸ் ஆப் இந்தியா” க்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் IPL 2021 இல் முதல் முறையாக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை வழிநடத்திய பான்ட் சிறப்பாக செயல்பட்டார். இந்த ஆண்டு மே மாதம் கொரோனா தொற்றுக் காரணமாக போட்டிகள் இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் டெல்லி அணி முதல் எட்டு ஆட்டங்களில் ஆறு போட்டிகளில் வென்றது மற்றும் புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்தது.

பான்டின் தலைமைத்துவ திறமையால் யுவராஜ் கவரப்பட்டார், மேலும் அவர் எதிர்கால இந்திய அணியின் தலைவராக தொடர முழுத்தகுதியும் கொண்டவர் எனவும் தெரிவித்துள்ளார்.