கோஹ்லியின் அணித்தலைமைக்கு வருகிறது ஆப்பு- தயார் நிலையில் ரோஹித்- BCCI உள்ளக தகவல்..!
அடுத்து வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணிகைப்பற்றுமாக இருந்தால்கே கோஹ்லி இந்திய அணியின் கேப்டன்சியை வைத்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இல்லையேல் அவரது தலைமைத்துவம் பறிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ஒரு வலுவான அணி இருந்தபோதிலும் அவர் ஒரு ஐசிசி தொடரிலும் இந்திய அணிக்கு வெற்றி தேடிக்கொடுக்கவில்லை.
உள்ளக அறிக்கைகளின்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது பிசிசிஐ தலைவர்களிடையே தலைமைத்துவம் குறித்தான கேள்வியை தோற்றுவித்தது . இறுதிப்போட்டியில் கோஹ்லியின் அணி தேர்வில் அவர்கள் அதிருப்தி அடைந்தனர், குறிப்பாக வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளத்தில் இரண்டு ஸ்பின்னர்களை விளையாடினர்.
குறிப்பாக ஐசிசி போட்டிகளில் விராட் கோலியின் கேப்டன்சி பற்றி BCCI ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு ஜூலை மாதம் BCCI நிர்வாகிகள் நடத்திய கூட்டத்தில், விராட் கேப்டன்சியில் நிறைய இந்திய கிரிக்கெட் சபை அதிகாரிகள் திருப்தியடையவில்லை என்பது தெரியவந்தது.
BCCI தலைவர் சவுரவ் கங்குலி, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, செயலாளர் ஜெய் ஷா மற்றும் பொருளாளர் அருண் துமால் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். WTC இறுதிப்போட்டியில் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதற்கான முடிவு BCCI அதிகாரிகளுக்கு சரியாகப்படவில்லை, எனவே, டி20 உலகக் கோப்பை விராட் கோலிக்கு, குறிப்பாக வரையறுக்கப்பட்ட ஓவர்கள் வடிவத்தில் கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என்று விவாதிக்கப்பட்டதாக உள்ளக அறிக்கைகள் தெரிவித்தன.
கோஹ்லியிடமிருந்து கேப்டன் பொறுப்பை ஏற்க மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்புள்ளன. ரோஹித் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் மற்றும் ஐபிஎல்லில் கேப்டனாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெவ்வேறான கேப்டன்சியை வழங்க நிர்வாகம் முடிவு செய்தால் அது ரோஹித் சர்மாவுக்கு சாதகமாகவே நிறைவுறும்.
“BCCI மூத்த அதிகாரி ஒருவர் 3 வடிவங்களுக்கும் 3 வெவ்வேறு கேப்டன்களை அமல்படுத்த பரிந்துரை செய்தார். மற்றொரு மூத்த BCCI அதிகாரி விராட் கோலிக்கு டெஸ்ட் கேப்டன் பதவியும், ரோஹித் சர்மாவுக்கு வரையறுக்கப்பட்ட ஓவர் கேப்டன்சியும் கொடுக்க பரிந்துரைத்தார், ”என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவின் கையாளுதலும் முக்கிய பேசுபொருளாக வந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 2019 உலகக் கோப்பை விளையாட்டுக்குப் பிறகு, குல்தீப்பின் வாழ்க்கை முற்றிலும் தடம் புரண்டது. யுஸ்வேந்திர சாஹலுடனான கூட்டாண்மையின் போது அவர் செய்த அதே மந்திரத்தை அவரால் மீண்டும் வெற்றிகரமாக தொழிற்படுத்த முடியவில்லை.
“இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டிருப்பது BCCI அதிகாரிகளுடன் சரியாகப் போகாத மற்றொரு மிகப்பெரிய சர்ச்சைக்குரிய முடிவாகும்.
அதே ஊடக அறிக்கையின்படி, விராட் கோலி இந்த ஆண்டு ஐசிசி டி 20 உலகக் கோப்பையை வெல்ல முடியாவிட்டால், அவர் வரையறுக்கப்பட்ட ஓவர் வடிவத்தில் இந்திய கேப்டன் பதவியை இழக்க நேரிடும். ரோஹித் முதன்மை விருப்பமாக இருந்தாலும், முடிவெடுப்பதில் அவரது வயது ஒரு காரணியாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.