கோஹ்லியின் செயலை பாராட்டும் நெட்டிசன்கள்- வீடியோ இணைப்பு.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்தப்போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 263 ஓட்டங்களைக் குவித்தது. இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் ஆட்டம் இழக்காது 128 ஓட்டங்களைக் குவித்தார்.

சதம் பெற்று ரூட் துடுப்பாடிக் கொண்டிருந்த நிலையில், தசைப்பிடிப்பு காரணமாக ரூட் அவதிப்பட, அவரது காலைப்பிடித்து கோஹ்லி சரிப்படுத்த முயற்சித்தார்.

இந்த கனவான் தன்மையான கோஹ்லியின் செயலை சமூக வலைத்தளங்களில் சகல கிரிக்கெட் ரசிகர்களும் புகழ்ந்து வருகின்றனர்.

விக்கெட்டை பறிகொடுக்காது கோஹ்லிக்கு தலைவலி கொடுத்துக் கொண்டிருந்த ரூட்டின் காலைப்பிடித்த கோஹ்லியின் செயல் உண்மையான கிரிக்கெட் உணர்வுக்கு சான்றாகும்.

இதேமாதிரியான ஒரு செயலை முன்னாள் தலைவர் தோனியும் முன்னர் மேற்கொண்டிருந்தார்.

 

தென் ஆபிரிக்க அணியின் பாFப் டு பிளாசிசின் காலைப்பிடித்து தோனியும் உதவியமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.