கோஹ்லியின் வாழ்வில் மறக்க முடியாத நாள்…!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லி இப்போதைய நிலையில் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒருவராக திகழ்ந்து வருகின்றார்.
ஆனால் விராட் கோஹ்லி அறியப்படாத இளையோர் உலக கிண்ணம் வென்ற நாட்கள் அமைந்திருந்தமை மறக்க முடியாதவை, 2008 ம் ஆண்டு மலேசியாவில் இடம்பெற்ற இளையோர் உலக கிண்ண போட்டி தொடரின் போது இந்திய அணி கோஹ்லி தலைமையில் கிண்ணம் வென்ற நாள் இன்றாகும்.
2008 இல் இளையோர் உலக கிண்ணம் வென்ற அணியில் இடம்பெற்று இப்போதும் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சும் வீரர்களாக கோஹ்லி, ஜடேஜா, மனிஷ் பாண்டே ஆகியோர் காணப்படுகின்றனர்.
தமிழக வீரர் அபினவ் முகுந்த், இஃபால் அபத்துல்லா, சித்தார்த் கவுல் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.