கோஹ்லி சொதப்புவார்- அடித்துச் சொல்லும் நியூசிலாந்து அணித்தலைவர்…!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி போட்டி எதிர்வரும் 18 ம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி சொதப்புவர் என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் பயிற்சியாளருமான க்ளென் டேர்னர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலைமைகள் இந்தியா போன்றதல்ல, குறிப்பாக போட்டி இடம்பெறவுள்ள சவுத்தம்டன் மைதானம் அதிகம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகத்தை கொடுக்கவல்லது.

Seam & Swing ஆக பந்துகள் வருமாக இருந்தால் கோஹ்லி திணறுவார் என்று கருத்து தெரிவித்துள்ளார். அதுவும் மப்பும் மந்தாரமான காலநிலை நிலவுகின்றபோது, டியூக் பந்துகள் இந்தியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.