கோஹ்லி-ரோஹித் இணை இணைந்து ஆடி ஆண்டு ஒன்று .

விராட் கோஹ்லியும், ரோஹித் சர்மாவும் இணைந்து இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடி இன்றோடு சரியாக ஒரு வருடம் நிறைவுக்கு வந்துள்ளது.
இறுதியாக இருவரும் இணைந்து நியூசிலாந்தின் ஹாமில்டன் மைதானத்தில் வைத்து T20 போட்டியொன்றில் விளையாடியிருந்தனர்.அந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று இந்தியா வென்றது.
அதன்பின்னர் கொரோனா காரணமாக இந்திய அணி கடந்தாண்டில் பெருமளவில் கிரிக்கெட் ஆகியிருக்கவில்லை,
ஆயினும், ஆஸ்திரேலியாவுடனான ODI,T20 போட்டிகளில் ரோஹித் உபாதை காரணமாக பங்கேற்றிருக்கவில்லை, டெஸ்ட்டில் முதல் போட்டியில் கோஹ்லி விளையாடினார், அதன் பின் கோஹ்லி குழந்தை பாக்கியத்துக்காக விடுப்பு எடுத்துக்கொள்ள ரோஹித் சர்மா அதன் பின்னரான 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியிருந்தார்.
ஆயினும் இருவரும் இணைந்து ஒன்றாக ஆடி இன்றுடன் ஆண்டொன்று கழிந்திருக்கிறது.