சங்கக்காரவிற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் -இந்த தலையிடியிலிருந்து எப்படி மீள்வார் ?

சங்கக்காரவிற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் -இந்த தலையிடியிலிருந்து எப்படி மீள்வார் ?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கார தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பணிப்பாளராக  (Team Director) செயல்பட்டு வருகின்றார்.

சஞ்சு சம்சனை தலைவராக கொண்ட இந்த அணியில் முன்னணி வீரர்கள் ஒவ்வொருவரும் விலகிகொள்வது சம்சன் + சங்கா ஜோடிக்கு பெருத்த நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.

  முன்னதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜொப்ரா ஆர்சர் உபாதை காரணமாக இந்த ஐபிஎல்லில் ஆரம்ப போட்டிகளில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ்  ஆரம்பகட்ட IPL போட்டிகளில் விளையாடி கொண்டிருந்தபோது உபாதைக்கு உள்ளானார்.

இந்த இரண்டு நட்சத்திர வெளிநாட்டு வீரர்களும் விலகியதை தொடர்ந்து, ராஜஸ்தான் அணிக்கு தன்னாலான முழுமையான பங்களிப்பை நல்கி கொண்டிருந்தவர் ஜொஸ் பட்லர்.

இந்த நெருக்கடிக்கு மத்தியில்தான் இன்றைய நாளில் இன்னொரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது .

ஆம் ,பட்லரும் சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளர் , இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக பட்லர் அறிவித்திருக்கிறார்.

எவ்வாறாயினும் சங்ககாரவின் வழிகாட்டுதலில் பயணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லரும் விலகி கொள்வது மிகப்பெரிய நெருக்கடி நிலைமை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் பட்லருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் கிலன் பிலிப்ஸ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த மிகப்பெரிய சிக்கல்களை எதிர்கொள்வதே இப்போதைய நிலையில் சங்கா + சம்சன் ஜோடியின் மிகப்பெரிய பொறுப்பாக அமையவுள்ளது.