சங்கக்கார ,பொண்டிங் ஆகியோர் சாதனைகளை தகர்த்தெறிந்த விராட் கோலி..!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் பேரவைை நடத்திக்கொண்டிருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
விராட் கோலியை பொறுத்தவரையில் ஐசிசி நடத்துகின்ற முக்கியமான தொடரின் இறுதிப் போட்டிகளில் ஓட்டங்கள் குறிப்பதில்லை எனும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஐந்தாம் நாளில் துடுப்பெடுத்தாடிய கோலி ,6 ஒட்டங்கள் பெற்று கொண்டார் .இதன் மூலமாக முதல் இன்னிங்சில் 44 இந்த இன்னிங்சில் ஆட்டமிழக்காது மொத்தம் 6 அடங்கலாக 50 ஓட்டங்களை கோலி சேர்த்திருக்கிறார்.
இந்த போட்டியை பொறுத்தவரையில் ஐசிசி நடத்துகின்ற தொடர்களில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்டது இதுவரைக்கும் குமார் சங்ககார .
Most Runs in ICC Semi Finals & Finals :
Kohli – 535 Runs
Sangakkara – 531 Runs
Ponting – 509 Runs#WTCFinal— ComeOn Cricket ??? (@ComeOnCricket) June 22, 2021
இந்த குமார் சங்ககாரவின் உடைய சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,
அதே நேரத்தில் இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 249 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது .
இரண்டாவதாக இதைத்தொடர்ந்து இந்திய அணி நேற்றைய ஆட்டம் நிறைவுக்கு வந்த நிலையில் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இருக்கின்றது.
இன்று போட்டியின் தீர்மானம் மிக்க இறுதிநாள் இடம்பெறவுள்ளது.