சங்காவின் மாஸ்டர் பிளான்- நம்பர் 1 போலரை வளைத்துப்போட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்..!

சங்காவின் மாஸ்டர் பிளான்- நம்பர் 1 போலரை வளைத்துப்போட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்..!

14வது ஐபிஎல் போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ளன.

முதல் பகுதி ஆட்டங்கள் இந்தியாவில் இடம்பெற்ற நிலையில் கொரோனாவின் தாக்கம் காரணமாக முதல் 30 ஆட்டங்களுடன் போட்டிகள் மட்டுப்படுத்தப்பட்டு, இரண்டாம் கட்ட ஆட்டங்களே ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் ஆரம்பமாகவுள்ளன.

இந்தநிலையில் பல வெளிநாட்டு வீரர்கள் விலகிக் கொண்டு வரும் காரணத்தால் அவர்களுக்கான மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிக முக்கியமான வீரரான அன்று  ரை இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகிக்கொள்ள ,அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் ரப்ஷிஸ் சம்ஸி அழைக்கப்பட்டிருக்கிறார்.

இருபது-20 போட்டிகளுக்கான புதிய தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் சம்ஸி அண்மைக்காலமாக தென் ஆப்பிரிக்காவின் தேசிய கிரிக்கெட் அணிக்கு T20 போட்டிகளில் மிகப்பெரிய வெற்றிகளுக்கு காரணகர்த்தாவாக விளங்கியவர்.

இந்த நிலையில் நம்பர் 1 போலரை  மாஸ்டர் பிளான் போட்டு அணியின் இயக்குனர் சங்ககார வளைத்துக் கொண்டு வந்திருக்கிறார்.

ஏற்கனவே அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் , ஆர்ச்சர் , பட்லர் ஆகிய முன்னணி வீரர்கள் விலகிக் கொண்டிருக்கும் நிலையில், வலுவிிழந் அந்த அணிக்கு  ஒரு புதுவகை உத்வேகமாக சம்ஸியின் வரவு அமையும் என கருதப்படுகிறது.