14 வது IPL தொடரில் பங்கேற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து இன்னுமொரு முக்கிய வீரரான லியாம் லிவிங்ஸ்டோன் திடீரென IPL தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
27 வயதான அவர் திங்கள்கிழமை வீட்டிற்கு பறந்ததாக குமார் சங்ககாரா பணிப்பாளராக செயல்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவரது முடிவை நாங்கள் புரிந்துகொண்டு மதிக்கிறோம், எங்களால் முடிந்தவரை அவருக்கு ஆதரவளிப்போம்” என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்டுள்ளது.
லிவிங்ஸ்டன் இந்த குளிர்காலத்தில் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் இங்கிலாந்து தேசிய அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அதே போல் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷிலும் விளையாடினார்.
கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் சுற்றுப்பயணங்கள் மற்றும் தொடர்கள் உயிர் பாதுகாப்பான Bio Bubble ‘குமிழ்களில்’ முறையில் நடைபெறுவதால், வீரர்கள் பெரும்பாலும் தங்கள் ஹோட்டல் போட்டி மைதானங்கள் என்பவற்றுக்கு மட்டுமே அனுமதிக்க படுகிறார்கள்.
தொடர்ச்சியாக இப்படி அடைபட்டுக்கிடப்பதே லியாம் லிவிங்ஸ்டோன் தாயகம் திரும்ப காரணம் என அறிய வருகின்றது.
ராஜஸ்தான் அணிக்காக விளையாடிவரும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரை காயத்தால் இழந்த ராயல்ஸ் அணியில் லிவிங்ஸ்டன் ஒரு ஆட்டத்திலும் விளையாடாமலேயே தாயகமே திரும்புகின்றமை அணிக்கு பலத்த நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.