சங்காவை பின்தள்ளியதுடன் புதிய உலக சாதனையை தொட காத்திருக்கும் பாபர் அசாம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரான பாபர் அசாம் ,தென் ஆபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடருக்கு பின்னர் புதிய உலக சாதனை ஒன்றை நெருங்கியுள்ளார்.

அவர் இறுதியாக விளையாடிய 28 இன்னிங்ஸ்களில் அனைத்திலும் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 29 இன்னிங்ஸ்களில் இரட்டை இலக்கை எட்டியுள்ள முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் ஜாவீட் மியண்டாட் 29 தடவை இவ்வாறு சாதனை படைத்துள்ள நிலையில், பாபர் அசாம் விரைவில் அந்த உலக சாதனையை முறியடிக்கவுள்ளார்.

நேற்றைய போட்டியில் 94 ஓட்டங்கள் பெற்றதன் மூலமாக பாபர் அசாம், சங்காவின் சாதனையை (27 தடவைகள்) கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாபர் அசாமின் இறுதி 28 இன்னிங்ஸ்கள் விபரம்.

94
31
103
125
77*
19
31
115
96
45
101*
69
48
30
63
22
80
115
15
51
16
24
41*
69
12
49
92
46