சங்கா, மஹேல – Play off வாய்ப்புக்கான நான்காவது அணி எது ? சென்னையை துவம்சம் செய்தது ராஜஸ்தான்..!

சங்கா, மஹேல – Play off வாய்ப்புக்கான நான்காவது அணி எது ? சென்னையை துவம்சம் செய்தது ராஜஸ்தான்..!

14வது ஐபிஎல் போட்டித் தொடரின் மிக முக்கியமான ஆட்டங்கள் இன்று நிறைவுக்கு வந்துள்ளன.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் 190 இலக்கை விரட்டி அடித்து மிகப்பெரிய வெற்றியைத் தனதாக்கியது.

இதன் மூலமாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லப் போவது சங்கக்காரவா, மஹேல ஜெயவர்தனவாஎன ரசிகர்கள் கேள்வி தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே மஹேல ஜெயவர்தன பயிற்சியாளராக இருக்கும் மும்பை இந்தியன்ஸ், சங்ககார ஆலோசகராக இருக்கும் ராஜஸ்தன் ரோயல்ஸ் ஆகிய அணிகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிகமான கவன ஈர்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் மஹேல ஜயவர்தனவின் மும்பை இந்தியன்ஸ், சங்கக்கார இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 4 அணிகள் இதுவரைக்கும் விளையாடிய 12 போட்டிகளில் தலா 5 வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில் IPL விறுவிறுப்பை எட்டியுள்ளது.

மீதமாக இந்த நான்கு அணிகளுக்கும் இரண்டு ஆட்டங்கள் காணப்படுகின்றன, இந்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெறுகின்ற அணி Play off சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும் என நம்பப்படுகிறது.

சென்னை அணி, டெல்லி அணி ஆகியன Play off சுற்றுக்கு தேர்வாகி விட்டன. இவற்றை தொடர்ந்து அதிகமான வாய்ப்பு விராட் கோலியின் RCB பெங்களூர் அணிக்கு காணப்படுகின்றது.

ஆகவே நான்காவது இடத்தை குறிவைத்தே இந்த நான்கு அணிகளும் பயணப்படுகின்றமை முக்கியமானது.

இன்று இடம்பெற்ற போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி ருத்துராஜின் சதத்தின் துணையோடு 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

190 எனும் இலக்கோடு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் ,சிவம் துபே ஆகியோருடைய அதிரடி ஆட்டம் கைகொடுக்க 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றது.

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே மூன்றாவது அணியாக Play off வாய்ப்பை உறுதிப்படுத்தி விடுவார்கள்.

ஆகவே நான்காவது இடத்தைப் பிடிப்பதற்கு 4 அணிகளுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது, ஐபிஎல் இன்னும் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் என்றே காத்திருப்போம்.

இன்று 19 பந்துகளில் அரைச்சதமடித்த ஜெய்ஸ்வால் தொடர்பிலான ஒரு யூடியூப் காணொளி ????