விராட் கோலி 51 இன்னிங்ஸ்களாக சர்வதேச ஆட்டங்கள் எதிலும் விராட் கோலி சதம் எதனையும் பெற்றுக் கொள்ள முடியாது தடுமாறுகின்றார்.
இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டிகளில் சின்னப்பிள்ளைக்கும் தெரிந்த ஒரு தவறை விராட் கோலி தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் பில் பந்தை வீழ்த்தினால், விராட் கோலி அதற்கு இரையாவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையாக இருக்கிறது .
விராட் கோலியை இந்த தொடரில் இரண்டாவது தடவையாக ஆட்டமிழக்கச் செய்தபின் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ரொபின்சன், இந்திய அணித்தலைவர் விராட் கோலி பற்றி தெரிவித்த கருத்து உற்றுநோக்கத்தக்கது.
விராட்கோலிக்கு 4வது அல்லது 5வது ஸ்டம்பில் பந்துவீசினால் விராட் கோலி எட்ஜ் ஆகி ஆட்டமிழந்து செல்வார் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என்று மட்டமாக பேசும் நிலைக்கு கோலி வந்துள்ளார்.
கோலி இந்த தவறை திருத்திக் கொள்வதற்காக சச்சின் டெண்டுல்கர் இடம் பாடம் எடுக்க வேண்டும் எனும் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் காணக் கிடைக்கிறது, சுனில் கவாஸ்கர் கூட இதே மாதிரியான ஒரு கருத்தை முன்வைத்திருந்தார் .
சிட்னியில் சச்சின் டெண்டுல்கர் 2004ஆம் ஆண்டு 241 ஓட்டங்களை பெற்றபோது எந்தவிதமான Cover Drive களையும் அவர் அடிக்கவில்லை , கோலி மாதிரியான தவறை சச்சின் முன்னர் செய்து ஆட்டமிழந்த காரணத்தால், சச்சின் எதுவிதமான கவர் டிரைவ் அடிப்பதில்லை என தவிர்த்து முழுவதுமாக லெக் சைடில் விளையாடி இரட்டை சதத்தை பதிவு செய்தார் .
சச்சின் வழியைப் பின்பற்றி இந்த மாதிரி Out side the off stump ல் வீசப்படுகின்ற பந்துகளை அதுவும் குறிப்பாக நான்காம், ஐந்தாம் ஸ்டம்ப்களில் வீசப்படுகின்ற பந்துகளை தவிர்த்து கோலி ஆட வேண்டும் என்பதே எல்லோருடைய கோரிக்கையாகவும் இருக்கிறது.
இதனையொட்டி சச்சின் டெண்டுல்கர் வகுப்பறையில் வாாத்தியாராகவும் கோலி மாணவனாகவும் இருந்து பாடம் படிக்கும் படம் ஒன்று இன்று சமூக வலைத்தளங்களை அதிகம் ஆக்கிரமித்திருக்கிறது.
வாத்தியாரின் வழியில் கோலி சாதிப்பாரா ?