சச்சின் தாஸ் பற்றி அவரது தந்தை குறிப்பிடும் சுவாரஸ்ய தகவல்..!

தனது பேட்டிங்கின் அடிப்படையில் இந்தியாவை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற சச்சின் தாஸ் பற்றிய சுவாரஸ்ய கதை ஒன்று வெளியாகியுள்ளது,

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் 96 ரன்கள் விளாசினார்.

அணியில் பினிஷராக விளையாடி வரும் சச்சின், 100க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் இதுவரை 294 ரன்கள் குவித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

உலகக் கோப்பை அரையிறுதியில் 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், சச்சின் (96) 5வது விக்கெட்டுக்கு கேப்டன் உதய் சஹாரன் (81) ஜோடி சேர்ந்து 171 ரன்கள் குவித்து அணியை கரை சேர்த்தனர்.

அணியின் வெற்றி குறித்து, ஆரம்ப காலத்தில் சச்சினின் வாழ்க்கையை வடிவமைத்த பயிற்சியாளர் ஷேக் அசார், அவரது ஆரம்ப பயணத்தைப் பற்றி பேசுகையில், தாஸின் தந்தை சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்்என்றார்.

இந்த வீரரின் பெயர், சிறந்த இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரால் ஈர்க்கப்பட்டு, டெண்டுல்கரைப் போலவே களத்தில் 10-வது எண் கொண்ட ஜெர்சியை அணிந்துள்ளார். இருப்பினும், அவர் விராட் கோலியின் ரசிகர்.

இதுகுறித்து சச்சினின் தந்தை சஞ்சய் கூறியதாவது:

2005 இல் சச்சின் பிறந்தபோது, ​​நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகனாக இருந்ததால் அவருக்கு சச்சின் பெயரை வைத்தேன், ஆனால் அவருக்கும் விராட் கோலியை மிகவும் பிடிக்கும்.

சச்சினுக்கு நண்பர்கள் இல்லை. நான் அவருடைய நண்பன். அவர் எந்த திருமணத்திற்கும், பிறந்தநாளுக்கும் செல்லவில்லை. கிரிக்கெட்டில் இருந்து அவரது கவனத்தை திசை திருப்பும் வகையில் எதையும் செய்ய நான் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.