சச்சின் விவசாயிகளுக்கு எதிராக கருத்து உரைத்தாரா ? ஒரு டுவீட் ஏற்படுத்திய சிக்கல்.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டுப் பிரபலங்களுக்குப் பதிலளிக்கும் வகையில்,இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்த ஒரு டுவீட் அவரை சர்சைக்குள் சிக்க வைத்திருக்கிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்தியாவில் விவசாயிகள் 70 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

அவர்களின் போராட்டத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில், பிரபல பாப் பாடகி ரியானாவின் ஒரு ட்விட்டர் பதிவு, உலக அளவில் இந்தப் போராட்டத்தின் வீரியத்தை கொண்டு சென்றது.

பல்வேறு பிரபலங்களும் விவசாயிகள் போராட்டம் குறித்து தங்களது கருத்துகளை பதிவிட்டனர். வெளிநாட்டவர்களின் இந்தக் கருத்துகள் இந்தியாவில் விவாதப் பொருளாக மாறியது.

இதற்கு சச்சின் பதிவிட்ட டுவீட் பதிவே சிக்கலை உருவாக்கியுள்ளது.

 

“வெளிநாட்டவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர, பங்கேற்க முடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும். இந்தியர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். ஒரு தேசமாக இணைந்திருப்போம்” என்று சச்சின் பதிவிட்டிருந்தார்.

 

இந்த பதிவே வாதப்பொருளாகி ஒவ்வொருவரும் சச்சினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கிரிக்கெட் கடவுள் தேவையற்ற ஒரு சிக்கலுக்குள் சிக்கிவிட்டார்.