சஞ்சய் பங்கரை மணந்த ஜஸ்பிரிட் பூம்ரா.. (மீம்ஸ்)…!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா இன்று திருமண பந்தத்தில் இணைத்துள்ளார், விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனை பூம்ரா கரம்பிடித்தார்.

1991ம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி பிறந்த சஞ்சனா கணேசன் மகாராஸ்டிரா மாநிலத்தின் புனே நகரைச் சேர்ந்தவர் .இவரது தந்தை கணேசன் ராமசாமி எழுத்தாளராகவும் முகாமைத்துவ குருவாகவும் திகழ்வதுடன் தாயார் சுஷ்மா கணேசன் சட்டத்தரணியாகவும் உடற்திடநிலை பயிற்றுவிப்பாளராகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள இந்தியாவின் ஆரம்ப வீரர் மாயங் அகர்வால் டுவிட்டர் தளத்தில் சஞ்சனா கணேசனை Tag செய்வதற்கு பதிலாக இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சேய் பங்காரை Tag செய்துள்ளார்.

அது தொடர்பில் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள மீம்ஸ்.