சஞ்சு சம்சன் இன் பொறுமையான ஆட்டம் -கல்கத்தாவை இலகுவாய் பந்தாடியது ராஜஸ்தான்!

14வது ஐபிஎல் தொடரின் இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது .

மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக கருதப்பட்டது.

இரண்டு அணிகளும் தாங்கள் விளையாடிய 4 போட்டிகளில் ஒவ்வொரு வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொண்ட நிலையில் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக காணப்பட்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சம்சன் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கொல்கத்தாவிற்கு வழங்கினார் ,இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியின் ஆரம்ப வீரர்கள் கில் மற்றும் நித்திஸ் ரானா ஆகியோர் முதல் 6 ஓவர்களில் மிக மந்த கதியிலேயே ஓட்டங்களை சேர்த்தனர் .

தொடர்ச்சியான பின்னடைவுகளுக்கு மத்தியில் கொல்கத்தா 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டக்களை இழந்து 133 ஓட்டங்களை மட்டுமே பெற்று கொண்டது.பந்து வீச்சில் கிறிஸ் மொரிஸ் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களை கைப்பற்றினார் .

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அணித்தலைவர் சஞ்சு சம்சன் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த 18.5ஆவது ஓவரில் மிக இலகுவான வெற்றியை ராஜஸ்தான் பெற்றுக்கொண்டது.

அணித்தலைவர் சாம்சன் ஆட்டம் இழக்காது 42 ஓட்டங்களையும் , ஆரம்ப வீரர் ஜசஸ்வி ஜைஸ்வால் 22 ஓட்டங்களையும் , மில்லர் ஆட்டம் இழக்காது 22ஓட்டங்களையும் பெற்றனர்.

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது ,இதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் இன்று தோல்வியைத் தழுவிய கொல்கத்தா 8வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.