ஆட்டமிழக்காமல் சதமடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்டாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 473 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 236 ரன்களிலேயே ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சகாம டேவிட் மாலன் 80 ரன்களையும், கேப்டன் ஜோ ரூட் 62 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து இன்னிங்ஸில் கடைசி விக்கெட்டாக களமிறங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆட்டமிழக்காமல் ஐந்து ரன்களை எடுத்திருந்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 முறை ஆட்டமிழக்காமல் திரும்பிய முதல் வீரர் எனும் அறிதான சாதனையை ஜேம்ஸ் அண்ட்சன் படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன், தான் விளையாடிய 100 இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் பெவிலியனுக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#ABDH