சதமடித்து அத்தனை போட்டிகளிலும் வெற்றிகளை ருசித்த வீரர்களின் பட்டியல் தெரியுமா?

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தாம் சதமடித்து அத்தனை போட்டிகளிலும் அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்று அபூர்வமான சில வீரர்கள் இருக்கிறார்கள் .

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சதமடித்து அத்தனை போட்டிகளிலும் தாங்கள் சார்ந்து அணியை வெற்றி பெற வைப்பது என்பதே மிகப்பெரிய சாதனைதான்.

அந்த மாதிரியான சாதனைகள் எல்லா வீரர்களுக்கும் அமைவதில்லை ,அதிக சதங்கள் அடித்து சாதனை படைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கரும் அல்லது அவர் சாதனையை முறியடிக்க போராடிக் கொண்டிருக்கும் விராட் கோலியும் இந்த பட்டியலில்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்து அத்தனை போட்டிகளிலும் அணியை வெற்றி பெறச் செய்த சில வீரர்கள் காணப்படுகிறார்கள், இதிலே முதன்மையானவராக அவுஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் காணப்படுகிறார்.

அவர் சதம் அடித்த 16 ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பட்டியல் ?

?அடம் கில்கிறிஸ்ட் – 16

?விவ்வியன் ரிச்சட்ஸ் – 11

?ஜேசன் ரோய் – 9

?அன்ரூ சைமன்ட்ஸ் – 6

?ரொம் லதம் – 5

?கம்ரன் அக்மல் – 5 

?சலீம் மாலிக் – 5

?பில் சிம்மொன்ஸ் -5