சதம் அடிக்காமல் தொடர்ந்து சொதப்பி கொண்டுபோகும் விராட் கோலி -இதற்கு முன்னர் இப்படி எத்தனை தடவைகள் சிக்கி இருக்கிறார் தெரியுமா ?

சதம் அடிக்காமல் தொடர்ந்து சொதப்பி கொண்டுபோகும் விராட் கோலி -இதற்கு முன்னர் இப்படி எத்தனை தடவைகள் சிக்கி இருக்கிறார் தெரியுமா ?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மையான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இதுவரை மொத்தமாக 70 சர்வதேச சதங்களை அடித்திருக்கும் விராட் கோலி, 71 வது சதத்தை அடிப்பதற்கு மிகப் பெருமளவில் தட்டுத்தடுமாறி வருகின்றமை அவர் ரசிகர்களுக்கு பெருத்த வேதனையை கொடுத்திருக்கிறது.

நேற்று அண்டர்சன் பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததை தொடர்ந்து விராட் கோலி மொத்தமாக 50 சர்வதேச இன்னிங்ஸ்களில் எதுவிதமான சதத்தையும் எட்ட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விராட் கோலியின் கிரிக்கெட் அகராதியில் இப்படி நீண்ட நாட்கள் சதம் கடக்காமல் 2019 முதல் 2021 வரையான இந்த காலப் பகுதியே அமைந்துள்ளது.

இதற்கு முன்னர் 2014 இல் 25 இன்னிங்ஸ்களும் 2011 ல் 24 இன்னிங்ஸ்களும் விராட் கோலி சதத்தை பெறுவதற்கு இடைவெளி எடுத்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விராட் கோலியின் 71 வது சதம் எப்போது என்பது ரசிகர்களின் பலத்த எதிர்்பார்ப்பாக இருக்கிறது.

இறுதி ஐம்பது இன்னிங்ஸ்களில் கோலி  பெற்றுக் கொண்ட ஓட்டங்களின் விபரத்தக உங்களுக்குத் தருகின்றோம்.