சந்திமாலுக்கு பதிலளித்துள்ள ஸ்ரீ லங்கா கிரிக்கெட்…!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சந்திமால் விளையாட்டில் தனது எதிர்காலம் குறித்து விவாதிக்க கோரி சமர்ப்பித்த கடிதத்திற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் பதிலளித்துள்ளது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, ​​சந்திமலின் கோரிக்கையை SLC விவாதித்துள்ளது, மேலும் அதிகாரிகளுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஒரு திகதியை அவருக்கு தெரிவிப்போம்.

சந்திமாலின் கோரிக்கையின் படியான விவாதத்திற்கு பொருத்தமான நேரம் மற்றும் இடம் குறித்து தெரிவிக்கப்படும்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஸ்ரீ இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்பக் குழுவின் தலைவருமான அரவிந்த டி சில்வாவுக்கு நேற்று எழுதிய கடிதத்தில், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் எதிர்காலத்திற்கான நிலைமை குறித்து தேர்வுக் குழுவிடம் சந்திமால் கேள்வி எழுப்பியிருந்தார்.

31 வயதான சந்திமால் மேலும் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அணியிலிருந்து ஒதுக்கப்படும் நிகழ்வு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, அதுவே எனது செயல்திறனை பாதித்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டிய சந்திமால், இலங்கை கிரிக்கெட்டின் கடந்த கால சீனியர்கள் வாழ்க்கையின் 2 வது பாதியில் தான் அதிக செயல்திறன் வெளிக்காட்டினர் என்பதைக் சுட்டிக்காட்டி, ஏன் 31 வயதாகும் என்னை புறக்கணிக்கிறீர்கள் எனவும் கேள்வி தொடுத்தார்,

இதனாலே தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து விவாதிக்க நேரம் வழங்குமாறு சந்திமால் கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.