சந்திமால் ,அவிஸ்க பெர்னான்டோவின் அபார ஆட்டத்தால் இறுதி போட்டிக்கு தேர்வானது SLC Reds அணி..!
இலங்கையில் இடம்பெற்று வரும் நான்கு அணிகளுக்கிடையிலான SLC T20 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு சந்திமால் தலைமையிலான எஸ் எல் சி ரெட் அணி தேர்வாகியது.
T20 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை அணியை தயார் படுத்துவதற்காக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த நான்கு அணிகளுக்கிடையிலான போட்டி தொடரின் இறுதிப் போட்டிக்கு சந்திமால் தலைமையிலான அணியும் தசுன் ஷானக தலைமையிலான அணியும் தேர்வாகியுள்ளன.
இன்று இடம்பெற்ற போட்டியில் அஷான் பிரியஞ்சன் தலைமையிலான SLC Greens அணியுடனான போட்டியில் மிகச் சிறப்பான வகையில் 6 விக்கெட்டுகளால் சந்திமால் தலைமையிலான SLC Reds அணி வெற்றி பெற்று கொண்டது.
பிரியஞ்சன் தலைமையிலான அணி விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது..
துடுப்பாட்டத்தில் சந்திமால் 40 ஓட்டங்களையும், அவிஸ்க பெர்னான்டோ 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
செவ்வாய்க்கிழமை தசுன் ஷானக தலைமையிலான SLC Greys அணி இறுதிப்போட்டியில் சந்திமால் தலைமையிலான SLC Reds அணியை சந்திக்கப் உள்ளமை குறிப்பிடத்தக்கது.